Wednesday, 24 February 2016

Sri Bala Tirupura Sundari

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம் 


மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.


ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியாரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது  (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.இம்மந்திரத்திற்கு ரிஷி பிரம்மா .

ஐம்  - என்ற பீஜம்  வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம், ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம்  - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக   வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

            இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.      


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்

Thursday, 18 February 2016

சாஸ்தா கோயில்கள் - 108 கேரளா

108 சாஸ்தா கோயில்கள் - கேரளா 



Following are the 108 Sastha temples in Kerala which is arranged and ordered as per the Ayyappan Thottam Paattu. 












List of 108 Sastha Temples in Kerala

1.Thrikkunnapuzha Dharmasasthavu,Alappuza
2. Thiruvullakkavu Sasthavu,Thrissur
3. Aryankavu Dharmasasthavu,Kollam
4.Chambrakulangara Ayyappan,
5.Chamravattam Sasthavu,Malappuram
6.Achan Kovil Darmasasthavu,Kollam
7.Kulathupuzha Sasthav,Kollam
8.Kolakkottiri Ayyappankavu,
9.Sabarimala Sreedharma Sasthavu,Pathanamthitta
10.Kizhakedesam Sasthavu,
11.Meenachil Sasthavu,
12.Arakkulam Dharmasasthavu,Iddukki
13.Mattil Sasthavu,
14 Cheruthazhathukavu Sasthavu,
15.Kalleli Sasthav,
16.Nandikeswarankavu Sastha,
17.Thakazhi Dhramasasthavu,
18.Chakkamkulangara Dharmasasthavu,
19.Aarattupuzha Sasthavu,Thrissur
20.Manaloor Ayyappan Kavu,
21.Manakodi Sasthavu,
22.Edathra Sasthavu,
23.Edathuruthi Ayyappan Kavu,
24.Kanyakulangara Dharmasasthavu,
25.Nettissery Sasthavu,
26.Mulankunnathu Kavu Darma Sasthavu,
27.Udalakkavu Sasthavu,
28.Kodumpu Ayyappa,
29.Manakkadu Dharmasasthavu,
30.Thykkadu Sasthavu,
31.Akamala Sreedharma Sasthavu,Thrissur
32.Thottakkare Molukurussy Ayyappankavu,
33.Ayyankuzhikkavu Sasthavu,
34.Kollankodu Pulikkodu Ayyappan,
35.Cherpulasery Ayyappan Kavu,Palakkad
36.Poonjal Darmasasthavu,
37.Punchapadam Pulinkkavu Ayyappa,
38.Theeyadikkavu,
39.Nagalassery Ayyappankavu,
40.Mundamuka Ayyappan,
41.Thichur Sasthavu,
42.Malamakkavu Ayyappan,
43.Nangulam Sasthavu,
44.Neriyamangalam Sasthavu,
45.Aanaparambu Daramasasthavu,
46.Thayankavu Sasthavu,
47.Perungottukavu Sasthavu,
48.Kothakulangara Sasthavu,
49.Mangalam Ayyappan Kavu,
50.Chemeli Dharmasasthavu,
51. Pottankkavu,
52.Thiruvarchanamkunnu,
53.Malamakkavu Ayyappan,
54.ThrikkalathurSreeraman,
55.Vayaskkara Dharmasasthavu,
56.Narayanamangalam Ayyappankavu,
57.Sakthikulankara Sasthavu,
58.Ayyappanpara Sasthavu,
59.Manalithara Mullapallikavu,
60.Kuttoor Sasthav,
61.Pattikkadu Dharmasastha,
62.Markkadakkavu Sastha,
63.Koodapuzha Marathopalli Sasthav,
64.Neervilagam Dharmasastha,
65.Kaattuvalli Dharmasastha,
66.Karukuttikkavu,
67.Kozhikkal Kandan Sasthavu,
68.Ezhinjillam Sasthavu,
69.Kannanallur Sasthavu,
70.Kutiyothu Temple,
71.Kannadiparambu Dharmasasthavu,
72.Chethamangalam Ayyappan,
73.Chovvara Sasthavu,
74.Edaneer Vishnu,
75.Kolasserykavu Sastha,
76.Paduvilakkavu Sastha,
77.Kaarakkattu Sreedharma Sasthavu,
78.Paandangari Dharmasastha,
79.Rampuram Sasthavu,
80.Kanimangalam Sasthavu,
81 Elampalli Madathil Dharmasasthavu,
82.Cheerappanchira Mukkalvattam Ayyappa,
83.Vyasachalam
Sasthavu,
84.Karthyakulangara Sreedharmasastha,
85.Thechikkottukavu Sastha,
86.Mupuramkavu Sreekandansasthavu,
87.Varamsasthamkotta Temple,
88.Pullukulangara Darmasasthavu,
89.Thrikkadambu Temple,
90.Chathankottakavu,
91.Kodannoor Sasthavu,
92.Mangattu Kavu Ayyappan,
93.Velupilli Dharmasastha,
94.Rarothu Ayyappa,
95.Thrivuvaniyoor Temple,
96.Malamel Temple,
97.Areswaram Sasthavu,
98.Karimpuzha Sreeraman Temple,
99.Chathannoor Bhoothanathan (Siva Temple),
100.Ponnabalamedu,
101.Koovapalli Narkkalakavu,
102.Mundarakodu Ayyappa,
103.Eramam Muthukkattukavu Ayyappan,
104.Kochambalam,
105.Erumeli Dharmasasthavu,Kottayam106. Kezhoor Dharmasasthavu,
107.Niram Kaithakkotta Sasthavu,
108.Arangavu Sasthavu,


 அப்பனுக்கொரு மலையுண்டு திருக்கயிலை
அன்னைக்கொரு மலையுண்டு ஏழுமலை
அண்ணனுக்கொரு மலையுண்டு பழனிமலை
ஐயப்பா உனக்கும் ஒரு மலையுண்டு சபரிமலை
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா
நம்முடைய கழுத்தில் மணிமாலை
நம்முடைய கனவு சபரி யாத்திரை
நம்முடைய நாவில் சரண மொழி
நம்முடைய வேதம் சரணமப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா
நமக்குள்ள லட்சியம் உன் தரிசனம்
நமக்குள்ளே இருப்பது உன் விரதம்
நமக்கென்றும் கதி பதினெட்டாம்படி
நமக்குண்டு மலை மேல் மகர ஜோதி
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா
அப்பன் அவன் நாமம் நமச்சிவாய
அன்னை அவள் நாமம் நாராயணாய
அண்ணன் அவன் கோஷம் ஹரோஹரா
எங்கள் ஐயப்பன் கோஷம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா
எங்கள் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர சங்கர......

ஸுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்




 ஸுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்

🌼1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

🌼2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

🌼3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

🌼4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

🌼5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

🌼6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

🌼7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

🌼8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

🌼9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

🌼10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

🌼11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

🌼12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

🌼13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

🌼14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

🌼15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்குஜெய பஞ்சகம்என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

🌼16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

🌼17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

🌼18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

🌼19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

🌼20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

🌼21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

🌼22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

🌼23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

🌼24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

🌼25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

🌼26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

🌼27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

🌼28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

🌼29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

🌼30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

🌼31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

🌼32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

🌼33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

🌼34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

🌼35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

🌼36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

🌼37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

🌼38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

🌼39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.


🌼40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்🌼


ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர சங்கர 

ருத்ராக்ஷம்

 ருத்ராக்ஷத்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராக்ஷங்கள் உள்ளன.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராக்ஷங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம் ;


1. அஸ்வினி /Aswini– ஒன்பது முகம் / 1-mukhi.
 2. பரணி/Bharani – ஆறுமுகம், பதிமூன்று முகம் 6/13 mukhi.
 3. கார்த்திகை/Karthigai – பனிரெண்டு முகம் / 12-mukhi
 4. ரோஹிணி/Rohini – இரண்டு முகம் / 2-mukhi
 5. மிருகசீரிஷம்/Mrigaseerisham – மூன்று முகம் / 1-mukhi.
 6. திருவாதிரை / Tiruvathirai – எட்டு முகம்/8-mukhi.
 7. புனர்பூசம் / Punarpoosam – ஐந்து முகம் / 5-mukhi.
 8. பூசம் / Poosam – ஏழு முகம் / 7-mukhi.
 9. ஆயில்யம் / Ayilyam – நான்கு முகம் / 4-mukhi.
 10. மகம் / magam – ஒன்பது முகம் / 9-mukhi.
 11. பூரம் / Pooram– ஆறுமுகம், பதிமூன்று முகம் / 6 or 13 mukhi
 12. உத்திரம் /Uthiram – பனிரெண்டு முகம் / 12-mukhi
 13. ஹஸ்தம் / Hastam – இரண்டு முகம் / 2-mukhi.
 14. சித்திரை /Chitirai – மூன்று முகம் / 3-mukhi.
 15. ஸ்வாதி / Swathi – எட்டு முகம் / 8-mukhi
 16. விசாகம் /Visakam – ஐந்து முகம் / 5-mukhi.
 17. அனுஷம் /Anusham – ஏழு முகம் /7-mukhi
 18. கேட்டை / Kettai – நான்கு முகம் /4-mukhi
 19. மூலம் /Moolam – ஒன்பது முகம் /9-mukhi
 20. பூராடம் /Pooradam – ஆறுமுகம். பதிமூன்று முகம் / 6 or 13-mukhi
 21. உத்திராடம் /Uthiradam – பனிரெண்டு முகம் / 12-mukhi
 22. திருவோணம் / Tiruvonam – இரண்டு முகம் / 2-mukhi
 23. அவிட்டம் / Avittam – மூன்று முகம் / 3-mukhi.
 24. சதயம் / Sadhayam – எட்டு முகம் / 8-mukhi.
 25. பூரட்டாதி /Pooratathi – ஐந்து முகம் / 5-mukhi.
 26. உத்திரட்டாதி /Uthirattathi – ஏழு முகம்/7-mukhi.
 27. ரேவதி / Revathi  – நான்கு முகம் /4-mukhi

அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராக்ஷத்தை அணிந்து பயன் பெறுங்கள்