Friday 14 February 2014

Mahaperiyavalin Paarayanam.















ஜயஜய ஷங்கர ஹரஹர ஷங்கர
ஜயஜய ஷங்கர ஹரஹர ஷங்கர...


இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்திகைகூடும்

ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்அருளைப் பெற்றுஇகபர லாபங்களை 
அடைந்து ஸ்ரேயஸைபெற வேண்டுகிறேன்.
 
அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம்குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
 



பொருள்:
எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும்படகாயும்
குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும்,வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் 
கொடுக்கிறதாயும்,பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ்காரம்மஸ்காரம்!
____________________________________________________________________________________________________
கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம ||

பொருள்:
கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்றசந்திரனாகவும்
துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும்மேகக்கூட்டமாகவும்
தன்னை வணங்கியவர்களின்துன்பங்களை போக்குகின்றதாகவும் 
உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!
____________________________________________________________________________________________________
நதா யயோஸ்ரீ பதிதாம் ஸமீயு:கதாசிதப்யாசு தரித்ரவர்யா:மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நமஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
 
பொருள்:
மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்தகுருவின் பாதுகைகளை 
வணங்கிய உடனேசெல்வந்தர்களாக ஆகிறார்களோஎந்த பாதுகைகளைவணங்கிய 
ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரானசொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோ
அவ்விதம்பெருமை வாய்ந்தநன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின்பாதுகைகளுக்கு 
நமஸ்காரம்நமஸ்காரம்!!
____________________________________________________________________________________________________
நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நமஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
 
பொருள்:
தாமரைக்கு நிகரானதாயும்பலவித மயக்கங்களை(மோஹங்களைபோக்கக்கூடியதாயும் தன்னைவணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை 
தரக்கூடியதாயும்உள்ளஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்!நமஸ்காரம்!!
_____________________________________________________________________________________________________
ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம்நதலோகபங்க்தே
நமோ நமஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
 
பொருள்:
அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்தரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் 
(நதியில்அழகுடன்விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும்
தன்னைவணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக்கொடுக்கக் கூடியதாயும் 
உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ்காரம்நமஸ்காரம்!!
____________________________________________________________________________________________________
பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுபாக்யாம் ||
 
பொருள்:
பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும்,மூன்றுவித தாபங்களாகிய 
ஆதிபௌதிகஆதிதெய்வீக,ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும்,
அக்ஞானமாகி (மூடத்தன்மைசமுத்ரத்தை வற்றச்செய்கின்ற வாடவாக்னியாகவும் 
விளங்குகின்ற ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!
 
குறிப்பு:ஆதிபுதிகம் : மண்ணாசைபொன்னாசைபெண்ணாசைஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம்ரிஷிரிணம்பித்ருரிணம் ஆகியரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்சத்வம்ரஜஸ்தமஸ் ஆகிய குணத்ரயம்
மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ ேர்ந்தோபிறவிக்குக் காரணமாகிறது
__________________________________________________________________________________________
சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
 
பொருள்:
ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய று குணங்களைக்கொடுக்கும் பெருமை 
வாய்ந்ததாயும்அவ்வாறுகுணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தைஅருளக்கூடியாதாயும்
ஸ்ரீமன் நாராயணனின்சரணாரவிந்தங்களில் நிலையா பக்தியைக் 
கொடுக்ககூடியதாயுமுள்ள 
ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்!நமஸ்காரம்!!
______________________________________________________________
 
ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
 
 
பொருள்:
தனனி (பாதுகைகளைபூஜிப்பதில் டுபாடுகொண்டவர்களுக்கு அனைத்து 
விருப்பங்களையும்கொடுக்கக் கூடியதாகவும்தேவதைகளின் அனுக்ரகத்தைவிரைவில் 
அளிக்கக்கூடியதாகவும்மனதிற்குததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் 
பூஜிக்கத்தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!
 
__________________________________________________ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 
 
 
காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
 
பொருள்:
ஆசை முதலிய தீய குணங்களாகிய பாம்புகளை அழிக்கும்கருடனாகவும்விவேகம் 
(நன்மைகளை தீமைகளை அறிதல்வைராக்யம் (பற்றின்மை), ஆகி செல்வங்களை 
கொடுக்கக்கூடியதாயும்ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும்,
தன்னை (பாதுகைகளைமனதில் சதா த்யானிப்பவர்களுக்குமோக்ஷத்தை 
அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக்கு 
நமஸ்காரம்நமஸ்காரம்!!
 
 
அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் ாதுகைகளுக்குநமஸ்கரித்து வாழ்வோம்வாழ்விப்போம்!!
ஸ்ரீ பெரியவா சரணம்!
 
 

No comments:

Post a Comment