இதை பிரதி தினமும் பாராயணம்
செய்வதால் குரு பக்திகைகூடும்.
ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடைந்து ஸ்ரேயஸைபெற வேண்டுகிறேன் .
அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்||
நௌகாயி தாப்யாம், குருபக்தி தா
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்
பொருள்:
எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும்படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும் ,வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும்,பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ்காரம்! நமஸ்காரம் !
கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம ||
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யா
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம |
பொருள்:
கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்ற சந்திரனாகவும், துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும் மேகக்கூட்டமாகவும், தன்னை வணங்கியவர்களின் துன்பங்களை போக்குகின்றதாகவும் உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம் !!
நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு:கதாசிதப்யாசு தரித்ரவர்யா:மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
பொருள்:
மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்தகுருவின் பாதுகைகளை வணங்கிய உடனேசெல்வந்தர்களாக ஆகிறார்களோ, எந்த பாதுகைகளைவணங்கிய ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரான சொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோ, அவ்விதம்பெருமை வாய்ந்த , நன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம் ! நமஸ்காரம்!!
நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
பொருள்:
தாமரைக்கு நிகரானதாயும், பலவித மயக்கங்களை (மோஹங்களை) போக்கக்கூடியதாயும் தன்னைவணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை தரக்கூடியதாயும் உள்ள, ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்!நமஸ்காரம்!!
ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
பொருள்:
அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்தரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் (நதியில்) அழகுடன் விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும் , தன்னைவணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக் கொடுக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ்காரம் ! நமஸ்காரம்!!
பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம்||
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம்
பொருள்:
பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும்,மூன்றுவித தாபங்களாகிய ஆதிபௌதிக, ஆதிதெய்வீக, ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும்,அக்ஞானமாகிய (மூடத்தன்மை) சமுத்ரத்தை வற்றச் செய்கின்ற வாடவாக்னியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
குறிப்பு:ஆதிபுதிகம் : மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷிரிணம் , பித்ருரிணம் ஆகியரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷி
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தம
மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ சேர்ந்தோ பிறவிக்குக் காரணமாகிறது
சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்||
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்
பொருள்:
ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய ஆறு குணங்களைக்கொடுக்கும் பெருமை வாய்ந்ததாயும், அவ்வாறுகுணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தைஅருளக்கூடியாதாயும் , ஸ்ரீமன் நாராயணனின் சரணாரவிந்தங்களில் நிலையான பக்தியைக் கொடுக்ககூடியதாயுமுள்ள ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம் !நமஸ்காரம்!!
ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யா
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் |
பொருள்:
தனனி (பாதுகைகளை) பூஜிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் கொடுக்கக் கூடியதாகவும் , தேவதைகளின் அனுக்ரகத்தை விரைவில் அளிக்கக்கூடியதாகவும் , மனதிற்குததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் பூஜிக்கத்தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம் ! நமஸ்காரம்!!
காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்||
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்
பொருள்:
ஆசை முதலிய தீய குணங்களாகிய பாம்புகளை அழிக்கும்கருடனாகவும், விவேகம் (நன்மைகளை தீமைகளை அறிதல் )வைராக்யம் (பற்றின்மை), ஆகிய செல்வங்களை கொடுக்கக்கூடியதாயும் , ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும் ,தன்னை (பாதுகைகளை) மனதில் சதா த்யானிப்பவர்களுக்குமோக்ஷத்தை அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் பாதுகைகளுக்கு நமஸ்கரித்து வாழ்வோம் ! வாழ்விப்போம்!!
ஸ்ரீ பெரியவா சரணம்!