Wednesday, 2 September 2015

ஷட்பதீ ஸ்தோத்ரம் பற்றி ஶ்ரீ மஹாபெரியவா

அதிலே ஸாக்ஷஅத் ஜகத் பரிபாலகனான மஹா விஷ்ணுவைப் பற்றி ரொம்பவும் உயர்ந்த கருத்துக்களும், மனஸை உருக்கும் பாவமும், வாய்க்கு அம்ருதமாக இருக்கிற வாக்கும் கொண்டதான ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்பது ஒன்று.

சின்ன ஸ்தோத்ரம்தான். அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு விட்டால் நாம் ஆசார்யாளையும் தெரிந்துகொண்டுவிடலாம்,

மஹாவிஷ்ணுவையும் தெரிந்து கொண்டு விடலாம், நம்மையும் தெரிந்துகொண்டுவிடலாம். நம்மைத் தெரிந்துகொள்கிறபடி தெரிந்து கொள்வதுதான் அத்வைதம். அந்த உச்சாணி வரைக்கும் இந்த ஷட்பதீ நம்மை அழைத்துக்கொண்டு போய்விடும்


ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: (1)

திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே (2)

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க: (3)

உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார: (4)

மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

தாமோதர குண்மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே (6)

நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.
பெரியவா கடாக்‌ஷம்.

No comments:

Post a Comment