காஞ்சி மாமுனிவரோ, சாதி, சமய, சமுதாயங்களைக் கடந்து இருக்கும் பேரருள். அதனால், அவரைக் கருத்தில் கொண்டு, எழுதிய வழித்துணை வேண்டுதல் இதோ:
போகுமெம் வழியிலே யாதொரு தடையுமோ
ஆகாத செயல்களோ கெடுதலோ தீமையோ
இல்லாது ஆக்கிடு செல்லும் வழியதைச்
சீராக்கிக் காத்திடு! சங்கரா! ஸத்யனே
நாராயணா! நாங்கள் நம்பிடும் தேவனே
காஞ்சிமா முனிவனே ஸ்ரீராம சந்த்ரனே
No comments:
Post a Comment