Monday 5 October 2015

மஹா பெரியவா சரணம்



அனுஷத்தில் உதித்த ஜோதி
அகிலத்தில் உலவும் ஜோதி
ஆத்மாவில் உரையும் ஜோதி
ஆலயத்தில் தாங்கும் ஜோதி
இம்மைக்கு வழிகாட்டும் ஜோதி
இல்லறத்திற்கு ஒளி வீசும் ஜோதி
ஈனப்பிறவியை உயர்த்தும் ஜோதி
ஈடில்லா அருள் செய்யும் ஜோதி
உண்மை பொருளை உணர்த்தும் ஜோதி
உலகை காக்கும் உத்தம ஜோதி
ஊழ்வினை பயனை மாற்றும் ஜோதி
ஊன் உறக்கம் தனை மறந்த ஜோதி
எளிமை கோலம் ஏற்ற ஜோதி
எங்கள் கவலை தீர்க்கும் ஜோதி
ஏற்ற தாழ்வை களையும் ஜோதி
ஏழ்மை அகற்றும் ஞான ஜோதி
ஐம்புலன்களையும் அடக்கிய ஜோதி
ஐயமில்லை அது தெய்வ ஜோதி
ஒப்புயர்வற்ற உண்மை ஜோதி
ஒளிநிறைந்த காஞ்சி ஜோதி
ஓம்காரமாய் ஒலிக்கும் ஜோதி
ஓய்வில்லா அருள் செய்யும் ஜோதி
ஔடதமாக ஆகும் ஜோதி
அஹ்தே காமகோடி பரமாச்சார்ய ஜோத


மஹா பெரியவா சரணம்..


2.
எங்கிருந்தோ வந்தான்
ஜகத் குருவா ? நானா?
என்றான் - ஈங்கிவனை
யாம் பெறவே என்ன
தவம் செய்து விட்டோம்.

குருநாதா - ஹோ ஹோ
குருநாதா

ஸத்குரு நாதா 
ஸதாசிவேந்த்ரா
ஸத் ஜன வினுதா
மாம்பாஹி |

ஸத் ஜன வினுதா
மாம்பாஹி!
ஸத் ஜன ஸுலபா
மாம்பாஹி!!

ஸத் குரோ பாஹிமாம்!
பரம தயாளோ ரக்ஷமாம்!!

ஸத் குரு மஹராஜ் கீ,
ஜெய விஜயீ பவ!!


ராம்! ராம்!!





No comments:

Post a Comment